சுதந்திர தினம்: கோவில்களில் சிறப்பு வழிபாடு-அமைச்சர்கள் பங்கேற்பு
சென்னை: சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னையில் இருக்கும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் உட்பட 32 கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் விருந்து நிகழ்ச்சி நடக்கிறது. இந்த விழாவை தமிழக அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் திறந்து வைக்கின்றனர்.
நாளை 62வது சுதந்திர தின விழா நடக்கிறது. இதையொட்டி சென்னையில் உள்ள 32 கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. இதில் தமிழக அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டு, வழிபாட்டை துவக்கி வைக்கின்றனர். அதன் விபரம்:
1. கபாலீஸ்வரர் திருக்கோவில், மயிலாப்பூர்- சபாநாயகர் ஆவடையப்பன்
2. கங்காதீஸ்வரர் ஆலயம், புரசைவாக்கம் - மின்சார துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி
3. அனந்த பத்மநாபசுவாமி கோவில், அடையார் - போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு
4. மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர் - சுகாதார துறை அமைசச்ர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்
5. மகாலட்சுமி திருக்கோவில், பெசன்ட் நகர் - சுற்றுலா துறை அமைச்சர் என். சுரேஷ்ராஜன்.
6. காரணீஸ்வரர் திருக்கோவில், சைதாப்பேட்டை - வருவாய் துறை அமைச்சர் இ.பெரியசாமி
7. வடபழனி ஆண்டவர் திருக்கோவில், வடபழனி - இந்து அறநிலைய துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்
8. முண்டகக் கண்ணியம்மன் கோவில், மயிலாப்பூர் - ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் தமிழரசி
9. குறுங்காளீஸ்வரர் கோவில், கோயம்பேடு - சமுதாய நலத்துறை அமைச்சர் பூங்கோதை
10. மாதவப் பெருமாள் திருக்கோவில், மயிலாப்பூர் - சென்னை மேயர் மா. சுப்பிரமணியன்
இதை தவிர்த்து வில்லிவாக்கம், சௌமிய தாமோதிர பெருமாள் கோவிலை ரங்கநாதன் எம்எல்ஏவும், மேற்கு தாம்பரத்தில் உள்ள செல்வவிநாயகர் மற்றும் கோதண்டராமர் திருக்கோவிலில் வழிபாட்டை எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏவும் துவக்கி வைக்கின்றனர்.
அண்ணாநகர் அருள்மிகு திருமேனியம்மன் கோவில் திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோவில், திருவல்லிக் கேணி அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோவில், தேனாம்பேட்டை அருள்மிகு பாலசுப்பிரமணியசாமி கோவில், நுங்கம்பாக்கம் அருள்மிகு அகத்தீஸ்வரர் மற்றும் பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவில் உள்ளிட்ட 32 ஆலயங்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
-
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
திருச்செந்தூரில் தரிசன முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போலீஸ்.. பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
விஜய் அரசுக்கு அக்னி பரீட்சை.. திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் நிலைப்பாடு என்ன? ஐகோர்ட் கேள்வி!












Click it and Unblock the Notifications