தமிழாசிரியருக்கு வீடு பரிசு தரும் நாமக்கல் மாணவர்கள்!
நாமக்கல்: நாமக்கல்லைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தமிழாசிரியர் ஒருவருக்கு, அவரிடம் படித்த முன்னாள் மாணவர்கள் ஒரு இரண்டு மாடி வீட்டை பரிசாக அளித்து குருதட்சணை செலுத்தவுள்ளனர்.
மிக மிக அரிய இந்த நிகழ்வு செப்டம்பர் 5ம் தேதி நடக்கவுள்ளது. அந்த பெருமைக்குரிய தமிழாசிரியரிடம் படித்த 500 மாணவர்கள் சேர்ந்து இந்த பரிசினை அளிக்கவுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் குருசம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.வி.வெங்கட்ராமன். அங்குள்ள பள்ளியில் 41 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி 1985ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
ஆசிரியராக இருந்த அவர் மாணவர்களுக்கு போதனை நிகழ்த்தவும், அவர்களின் நலனில் மட்டுமே அக்கறை செலுத்தியதாலும், தனது சொந்த நலன் குறித்து கவலைப்படாமல் இருந்து விட்டார். விளைவு, பொருளாதாரத்தில் அவர் செழிப்பாக இல்லை.
வாடகை கூட கட்ட முடியாத நிலையில், குருசம்பாளையத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்தச் செய்தி, அவரிடம் படித்த முன்னாள் மாணவர்களுக்குப் போனது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஒன்று சேர்ந்தார்கள். கிட்டத்தட்ட 500 பேர் ஒன்று கூடி கடந்த 2007ம் ஆண்டு ஆலோசனை நடத்தினர். தங்களை உயர்வித்த ஆசிரியருக்கு எப்படியாவது உதவ வேண்டும் என தீர்மானித்தனர்.
இதுகுறித்து ஆசிரியர் வெங்கட்ராமனின் முன்னாள் மாணவரும், ஓய்வு பெற்ற நகராட்சி ஆணையருமான எம்.ஏ. அர்த்தநாரி கூறுகையில், கிட்டத்தட்ட 500 பேர் 2007ம் ஆண்டு ஒன்று கூடி விவாதித்தோம். அப்போது எங்களது ஆசிரியருக்கு ஒரு வீட்டை கட்டி அதை அவருக்குப் பரிசளிக்க முடிவு செய்தோம்.
இதையடுத்து பணம் திரட்டும் வேலைகள் தொடங்கின. தற்போது எங்களது ஆசிரியருக்காக 2 மாடிகளைக் கொண்ட வீட்டை உருவாக்கி விட்டோம்.
எங்களது ஆசிரியருக்கு பென்ஷனாக தற்போது ரூ. 9000 கிடைக்கிறது. நாங்கள் தரப் போகும் வீடு அவரது கஷ்டத்தை துடைக்கும். அதேசமயம், எங்களுக்கு நல்வழி காட்டிய ஆசிரியருக்கு நாங்கள் தரும் குருதட்சணையாகவும் அமையும்.
ஆசிரியர் தினமான செப்டம்பர் 5ம் தேதி எங்களது ஆசிரியரிடம் வீட்டை ஒப்படைக்கவுள்ளோம். அந்த மகிழ்ச்சியான தினத்திற்காக அனைவருமே காத்திருக்கிறோம் என்றார் நெகிழ்ச்சியுடன்.
ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையிலான உறவு இன்று முன்பு போல அவ்வளவு சிறப்பாக இல்லாத நிலை. ஆனால் தங்களுக்குப் பாடம் நடத்திய ஆசிரியரின் நிலையை உணர்ந்து, தவித்துப் போய் அவருக்கு உதவுவதற்காக ஒரு வீட்டையே பரிசாக கொடுக்கும் இந்த மாணவர்கள் நிச்சயம் பாராட்டுக்குரியவர்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications