குழந்தைகளின் கனவுகளை நிஜமாக்க உதவ ட்விட்டர் விழா
பெங்களூர்: ஏழை குழந்தைகளின் படிப்பு, உணவு ஆகியவற்றுக்கு உதவும் வகையில் பெங்களூரில் உள்ள ட்விட்டர் பயனாளர்கள் ஒன்றிணைந்து வரும் சனிக்கிழமையன்று ட்விட்டர் விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
ட்விட்டர் இணையதளத்தின் மூலம் நண்பர்களாக மாறியவர்கள், ஆண்டுக்கு இரு முறை ட்விட்டர் விழாக்களை கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் சர்வதேச நிகழ்வையும, செப்டம்பரில் உள்ளூர் நிகழ்வையும் முன்னிறுத்தி இதை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையி்ல் இந்த விழாவின் சர்வதேச நிகழ்வு உலகம் முழுவதும் சுமார் 200 நகரங்களில் நடைபெறவுள்ளது. இதில் பெங்களூரும் ஒன்று.
இந்திரா நகரில் இந்த விழா நடைபெறுகிறது. உள்ளூர் ஏழை குழந்தைகளுக்கு உதவும் வகையில் நலநிதி சேகரிக்கும் நோக்கில் இது நடத்தப்படுகிறது. ஜெயநகரை சேர்ந்த ட்ரீம் ஏ ட்ரீம் என்ற என்ஜிஓ அமைப்பு இதற்கு ஏற்பாடு செய்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த என்ஜிஓ அமைப்பு பின்தங்கிய மற்றும் பலவீனமான குழந்தைகளை தேர்வு செய்து அவர்களுக்கு உதவ நினைத்துள்ளது.
விழாவின் ஒருங்கிணைப்பாளர் ஹிரிஷ் தோடா கூறுகையில்,
சுவாரத்மா என்ற இசைக்குழுவினர் நடத்தும் நிகழ்ச்சியை இந்திரா நகரில் உள்ள கைரா பகுதியில் நடத்த தி்ட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்ச்சியின் டிக்கெட் வசூல் மூலம் கிடைக்கும் தொகையை கொண்டு ஏவை குழந்தைகளுக்கு உதவ இருக்கிறோம்.
தற்போது உலகம் வேகமாக முன்னேறி வருகிறது. ஆனால், பல குழந்தைகள் வயிறார சாப்பாடு, தேவையான படிப்பு ஆகியவை கூட கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இது அவர்களுக்கு ஒரு கனவாகவே இருக்கிறது.
இதனால் அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு வந்தது. இந்த குழந்தைகளின் கனவுகளை நிறைவேற்றுவதே எங்கள் கனவு.
கடந்த பிப்ரவரியிலும் இது போன்ற நிகழ்ச்சி நடந்தது. ஆனால், எங்களுக்கு அப்போது ஒரு வார காலம் மட்டுமே இருந்ததால் நிகழ்ச்சிகளை வேகமாகவும், சுருக்கமாகவும் நடத்தினோம். அதில் வினாடி வினா போட்டி நடத்தினோம். டி-சர்ட்ஸ், தபால் அட்டை ஆகியவற்றை விற்பனை செய்தோம் என்றார்.
ரூ. 1.25 கோடி நிதி...
கடந்த பிப்ரவரியில் இந்தியாவில் உள்ள 202 நகரங்களில் இந்த நிகழ்ச்சி நடந்தது. அதில் ஏழைகளுக்கு சுகாதாரமான நீர் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அப்போது ஒரே நாளில் சுமார் ரூ. 1.25 கோடி நிதி திரட்டப்பட்டது. 55 குடிநீர் திட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியா, உகான்டா, எத்தியோபியா ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 17 ஆயிரம் பேர் இதனால் பயனடைந்துள்ளனர். இந்தியாவில் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த 2,079 பேர் இதன்மூலம் நல்ல நீரை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications