ரம்ஜான் எதிரொலி- இறைச்சி விலை ஏற்றம்
நெல்லை: நெல்லையில் ரம்ஜான் பண்டிகையை ஓட்டி ஆடு, கோழி இறைச்சி விலை உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் நாளை ரம்ஜான் பண்டிகை இஸ்லாமியர்களால் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
நாளை அதிகாலையில் புதிய ஆடைகளை அணி்ந்து தொழுகையில் ஈடுபடுவர். பின்னர் நண்பர்கள், உறவினர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து கூறுவர். இதை தொடர்ந்து வீடுகளில் அசைவம் சமைத்து நண்பர்கள், உறவினர்களுக்கு விருந்து கொடுப்பர். இந்நாளில் ஆடு, கோழி இறைச்சி விற்பனை சூடு பிடிக்கும்.
இதற்காக வியாபாரிகள் தங்களுக்கு தேவையான ஆடுகளை உக்கிரன்கோட்டை அருகே உள்ள ரெட்டியார்பட்டி, தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம், பழனி அருகேயுள்ள கன்னியாடி பகுதிகளில் உள்ள சந்தைகளில் வாங்கி வைத்துள்ளனர்.
ஆடு கொள்முதல் விலை, போக்குவரத்து, தோல் விலை இறக்கம் ஆகியவற்றின் காரணமாக ஆடு இறைச்சி விலை அதிகரித்துள்ளது. இதில் பாளையில் ஆட்டு இறைச்சி எலும்புடன் ரூ.240க்கும், தனி கறி ரூ.280க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
ஆனால் ரம்ஜான் பண்டிகையை ஓடடி எலும்பு கறி ரூ.260க்கும், தனி கறி ரூ.300க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலப்பாளையம் பகுதியில் எலும்பு கறி ரூ.240க்கும், தனி கறி ரூ260க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் கோழி இறைச்சி கடைகளும் நாமக்கல் பகுதியிலிருந்து தேவையான அளவு கோழிகளை வாங்கி வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications