தமிழகத்துக்கு பால்வார்க்கும் வடகிழக்கு பருவமழை!

இந்தியாவில் இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை தவறியது. இதையடுத்து நாடு முழுவதும் பரவலாக வறட்சி ஏற்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.
அதேபோல் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான பருவமழை காலத்தில் இந்தியாவில் மழை வழக்கமான அளவுக்கு சற்று குறைவாக பெய்யும் என கூறப்பட்டது.
ஆனால், தற்போது அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இருக்கும் சர்வதேச வானிலை ஆராய்ச்சி நிறுவனம் தமிழகம் உட்பட தென்னிந்தியாவில் மட்டும் நல்ல மழை பொழியும் என தெரிவித்துள்ளது.
மேலும், அந்த நிறுவனம் வெளியிட்டு அறிக்கையில்,
தென் தமிழகத்திலும், அதை ஒட்டிய கேரள பகுதியிலும் வழக்கத்தை விட கூடுதல் மழை பொழியும். அதே சமயத்தில் வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் அதிக வெப்பம் நிலவும். இதனால் இந்த பருவமழை ரபி பயிர்க்கு ஏற்றதாக இருக்காது.
மத்திய கிழக்கு கடற்கரை பகுதிகளில் மழை வழக்கம் போல் இருக்கும். நாட்டின் மற்ற பகுதிகள் தொடர்ந்து வானத்தை பார்த்தபடி தான் இருக்க வேண்டும் என்கிறது.
இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் செய்தி குறிப்பில்,
வடகிழக்கு பருவமழை காரணமாக மேற்கு வங்கம், சிக்கிம், வட கிழக்கு மாநிலங்கள், கேரளா ஆகிய பகுதிகளில் நாளை வரை மழை பெய்யும். தென்னிந்தியா முழுவதும் ஆங்காங்கே நல்ல மழை பெய்யும் என்கிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications