குலசேகரன்பட்டனத்தில் தசரா விழா கொண்டாட்டம்

இங்கு தசரா விழா கடந்த 19ம் தேதி கொடியேற்றுத்துடன் தொடங்கியது. தசரா திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் கோயிலில் சிறப்பு ஆதாரனைகளும், அன்னதானம், சமய சொற்பொழிவுகள், பட்டிமன்றம், கச்சேரி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
ஒன்றாம் நாள் விழா முதல் பக்தர்கள் கோயிலுக்கு வந்து காப்பு கட்டி வேடம் அணிந்து வீடு வீடாக சென்று காணிக்கை வசூலித்து வந்தனர். இதை போலவே குழுக்களாக வேடம் அணியும் பக்தர்கள் ஆறாம் திருவிழாவான 24ம் தேதி மேளம், கரகம் மற்றும் ஆடல், பாடல் குழுவினருடன் ஆடி, பாடி கோயிலுக்கு வந்து கடலில் நீராடி காப்பு கட்டி ஏழாம் திருவிழா முதல் வேடம் அணிந்தூ ஊர் ஊராக சென்று கலை நிகழ்ச்சிகளை நடத்தி காணிக்கை பெற்று வந்தனர்.
பத்தாம் திருநாளான நேற்று இரவு கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேடை அமைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். இந்த கலை நிகழ்ச்சிகளை காணவும், இரவு 12 மணிக்கு அம்மன் கடற்கரை சிதம்பரேஸ்வர் கோயிலுக்கு முன்பாக சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கடற்கரைக்கு சென்று மகிசா சூரனை சம்காரம் செய்யும் நிகழ்ச்சியை காணவும் லட்சகணக்கான பக்தர்கள் குலசேகரபட்டிணத்தில் குவிந்தனர்.
மகிசாசுர வதம் நேற்று நள்ளிரவில் நடந்தது. இதைக் கண்டு தரிசித்த பக்தர்கள் பின்னர் புனித நீராடினர்.
தடையை மீறி ஆடல், பாடல் நிகழ்ச்சி:
இந்த நிலையில், 7ம் திருநாளான்று இரவு கோயில் கலையரங்கில் துர்க்காதேவி வேடம் அணிந்த பக்தர்களின் கலைநிகழ்ச்சிக்கு குலசை சப்-இன்ஸ்பெக்டர் முத்து தலைமையிலான போலீசார் தடை விதித்தனர்.
மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவுபடி ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க கூடாது என மேல் அதிகாரிகள் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளனர். எனவே எந்த குழுவினரும் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தார்.
ஆனால் கோர்ட் உத்தரவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை தடைவிதிக்க முடியாது. அதில் ஆபாசம் இருந்தால் போலீசார் தடை விதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோயில் அறங்காவலர் குழு கோர்ட் உத்தரவை மீறி நிகழ்ச்சியில் ஆபாசம் இருக்காது, ஆடல், பாடல் நடத்த அனுமதிக்க வேண்டும் என கேட்டு கொண்டார். எனினும் போலீசார் அனுமதியளிக்கவில்லை.
இந்நிலையில் போலீசாரின் தடையை மீறி ஒவ்வொரு குழுவினரும் ஆடல், பாடல் நிகழ்ச்சியை வீதி, வீதியாக நடத்தினர். ஆயிரகனக்கானோர் ஓரே இடத்தில் கூடியிருந்ததால் போலீசாரால் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க முடியவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications