துபாய் தமிழ் சங்கத்தில் காந்தி ஜெயந்தி, பாரதி நினைவு விழா
துபாய்: துபாய் தமிழ் சங்கத்தின் சார்பில் நாளை காந்தி பிறந்த நாள் மற்றும் பாரதியார் நினைவு நாள் விழா நடத்தப்பட இருக்கிறது.
இந்த விழா 02.10.2009ம் தேதி மாலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை ஷார்ஜா ஸ்டார் சர்வதேசப் பள்ளியில் நடைபெறும் என துபாய் தமிழ் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் சுப்புலட்சுமி மற்றும் திருமதி மீனாட்சி காந்தி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
துபாய் தமிழ்ச் சங்கம் இந்திய துணை தூதரகத்தின் ஆதரவுடன் செயல்பட்டு வரும் இந்திய சமூக நல அமைப்பின் ஒரு உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் 050 5787657 எனும் எண்ணுக்கோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ தொடர்பு கொள்ளலாம்.
இந்திய துணை தூதரகத்தில் காந்தி பிறந்தநாள்:
துபாய் இந்திய துணை தூதரகம் மற்றும் இந்திய உயர்நிலைப்பள்ளி ஆகியவை இணைந்து காந்தியடிகளின் 140வது பிறந்தநாள் விழா மற்றும் ஐநாவின் வன்முறை எதிர்ப்பு நாள் விழா ஆகியவை 02.10.2009 மாலை 5.00 மணிக்கு இந்திய உயர்நிலை பள்ளிக்கு சொந்தமான ஷேக் ராஷித் அரங்கில் நடைபெற உள்ளது.
இதில் இந்திய துணை தூதரக ஜெனரல் வேணு ராஜாமணி, எமிரேட்ஸ் வர்த்தக அமைச்சர் ஷேக்கா லுப்னா பிந்த் காலித் அல் காஸிமி, ராசல் கைமா பிரீ டிரேட் ஜோன் தலைவர் ஷேக் பைசல் பின் சகர் அல் காஸிமி, அமைச்சர் ரீம் அல் ஹாஸிமி, இந்தியப் பள்ளி நிர்வாகிகள், இந்திய சங்க நிர்வாகிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications