அக். 30 முதல் நொய்டா கைவினைப் பொருள் திருவிழா
Subscribe to Oneindia Tamil
லக்னோ: நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் கலந்து கொள்ளும் கைவினைப் பொருள் திருவிழா உ.பி. மாநிலம் நொய்டாவில் அக்டோபர் 30ம் தேதி தொடங்குகிறது.
10 நாட்களுக்கு இந்த மாபெரும் திருவிழா நடைபெறும். இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த கைவினைப் பொருட்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்படும்.
சில்போத்சவ் நொய்டா என பெயரிடப்பட்டுள்ள இந்தத் திருவிழா முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இனிமேல் ஆண்டுதோறும் இந்த திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபலமான ஹரியானா மாநிலம் சூரஜ்குண்ட் மேளாவைப் போல இந்த நொய்டா சில்போத்சவ் விழாவும் படிப்படியாக உயர்த்தப்படும் என உ.பி. மாநில சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.
நொய்டா ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மாநில சுற்றுலாத்துறை இந்த கைவினைப் பொருள் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications