வயதான பெற்றோர்களை கவனிக்காவிட்டால் தண்டனை
சென்னை: பிள்ளைகளால் புறக்கணிக்கப்படும் பெற்றோர்களின் துயரங்களை துடைக்க தமிழக அரசு புதிய சட்டத்திருத்தத்தை கொண்டு வர இருக்கிறது. இதையடுத்து பெற்றோரை கவனிக்க தவறினால் சிறை தண்டனை அல்லது ரூ. 5 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் என தண்டனை விதிக்கப்பட இருக்கிறது.
தமிழக அரசு கடந்த 2007ல் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் சட்டத்தை இயற்றியது. சமீபகாலமாக வயதான பெற்றோர்களை, பிள்ளைகள் சரியாக கவனிக்கவில்லை என தொடர்ந்து புகார் கூறப்பட்டு வருகிறது. இதையடுத்து தற்போது இந்த சட்டத்தில் சில மாற்றங்களை தமிழக அரசு கொண்டு வர இருக்கிறது.
இது குறித்து சமூக நலத்துறை முதன்மை செயலாளர் ராம மோகன ராவ் கூறுகையில்,
சமூக நலத்துறையும், சட்டத்துறையும் இணைந்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான அம்சங்களை செய்து வருகின்றன. புதிய சட்டத்தை அமல்படுத்தும் போது ஏற்படும் சிக்கல்கள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
இந்த விவகாரத்தை வருவாய் துறை கவனிப்பதா அல்லது சமூகத்துறை கவனிப்பதா என ஆலோசித்து வருகிறோம். இந்த சட்டம் விரைவில் அமலுக்கு வரும்.
இந்த சட்டத்தை பயன்படுத்தி தன்னை கவனிக்காத குழந்தைகள் மீது 60 வயதுக்கு மேலான பெற்றோர்கள் புகார் கொடுக்கலாம். ஆனால், பிள்ளைகள் மைனர்களாக இருந்தால் புகார் கொடுக்க முடியாது. இந்த புகார்களை பெற்றோர்கள் தான் கொடுக்க வேண்டும் என்றில்லை. அக்கம்பக்கத்தினரோ அல்லது சமுதாய அமைப்போ கூட கொடுக்கலாம்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆர்டிஓ தலைமையில் தீர்ப்பாயம் ஒன்று அமைக்கப்படும். புகார் கொடுக்க விரும்புவோர்கள், தங்களது புகாரை அங்கு கொடுக்கலாம். இது தொடர்பான புகார்கள் பராமரிக்கும், விசாரிக்கும் மற்றும் அறிக்கை அளிக்கும் பொறுப்பு சமூக நலத்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பாயம் குறித்த மேல் முறையீடுகளை மாவட்ட கலெக்டெரிடம் கொடுக்கலாம். இந்த வழக்கில் உண்மை கண்டுபிடிக்கப்பட்டால் சிறை தண்டனை அல்லது ரூ. 5 ஆயிரம் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படலாம் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications