விமான கடத்தல்-41 ஆண்டுக்கு பின் சரண்
வாஷிங்டன்: அமெரிக்காவில் 1968ம் ஆண்டு நியூயார்க்கில் இருந்து ப்யூர்டோ ரிகோ சென்ற விமானத்தை கடத்த முயன்ற கடத்தல்காரனை போலீஸார் சுமார் 41 ஆண்டுகளுக்கு பிறகு சரணடைந்துள்ளார்.
லூயில் அர்மான்டோ பெனா சோல்ட்ரன் என்ற 66 வயது நபர் நேற்று நியூயார்க் ஜான் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள போலீஸாரிடம் சரணடைந்தார்.
அவரை கைது செய்த போலீஸார் 41 ஆண்டுகளுக்கு முன் நடந்த விமான கடத்தல் வழக்கில் தேடப்படும் குற்றவாளி அவர் தான் என்பதை உறுதி செய்தனர்.
இது குறித்து நியூயார்க் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
இதே விமான நிலையத்தில் வைத்து தான் கடந்த 1964, நவம்பர் 24ம் தேதி அர்மான்டோ தனது கூட்டாளிகள் மூன்று பேருடன் பான் ஆம் 281 என்ற விமானத்தை கடத்த முயன்றார். அவர்கள் கையில் துப்பாக்கி, கத்தி போன்ற ஆயுதங்களுடன் விமானத்தை கியூபாவுக்கு திருப்புமாறு கூறினர்.
ஆனால், விமானிகள் சாமர்த்தியமாக அந்த கடத்தல் சம்பவத்தை முறியடித்துவிட்டனர். இதையடுத்து அவர்கள் நான்கு பேரும் விமானத்தில் இருந்து தப்பித்துவிட்டனர்.
இதையடுத்து போலீஸார் அர்மான்டாவை தவிர்த்து மற்ற மூன்று பேரையும் கைது செய்துவிட்டனர். அவர்கள் அலெஜான்ட்ரோ பிகியூரோ என்பவருக்கு 1969ல் தண்டனை வழங்கப்பட்டது. மற்ற இருவர்களான ஜோஸ் ரபெல் ரியாஸ் குரூஸ் மற்றும் மிகுல் காஸ்ட்ரோ ஆகியோருக்கு 1970ல் தலா 15 மற்றும் 12 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது.
இவர்கள் மூவரும் பல ஆண்டுகளுக்கு முன்பாகவை சிறை தண்டனை அனுபவித்துவிட்டனர். ஆனால், தலைமறைவாக இருந்த அர்மான்டோ தற்போது தான் கிடைத்துள்ளார். 25 வயதில் தப்பியோடிய அவர் தனது இளமை பொழுதை தலைமறைவாக கழித்துவிட்டு தற்போது 66 வயதில் சரணடைந்துள்ளார்.
40 ஆண்டுகளுக்கு மேல் அமெரிக்க அரசை ஏமாற்றிய அவருக்கு உரிய தண்டனை வாங்கி தரப்படும் என்றார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications