கேளம்பாக்கம் சிவசங்கர் பாபா ராம்ராஜ்யத்தில் கந்த சஷ்டி விழா
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை கேளம்பாக்கத்தி்ல் உள்ள சிவசங்கர் பாபாவின் ராம்ராஜ்யா வளாகத்தில், கந்த சஷ்டி விழா தொடங்கியது.
ஆண்டு தோறும் ராம்ராஜ்யா வளாகத்தில் கந்த சஷ்டி விழா சிறப்புற கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் வழக்கம் போல கந்த சஷ்டி விழா சிறப்பாக தொடங்கியுள்ளது.
6 நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழாவின் 6வது நாளன்று சூர சம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும். இதில், சுஷில் ஹரி பள்ளி மாணவ, மாணவியர் அனைவரும் கலந்து கொண்டு கண்டு களிப்பார்கள்.
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, ராம் ராஜ்ய வளாகத்தின் முதனமைக் கடவுளான பூர்ண பிரம்மம், முருகப் பெருமான் கோலத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
தினசரி திருப்புகழ் பாடி சஷ்டி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இத்தகவலை பூர்ண பிரம்மம் கோவில் மீடியா பொறுப்பாளர் ரெய்கி சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.













Click it and Unblock the Notifications