ஆர்.டி.ஐ சட்டம்-தகவல் தருவதில் தமிழ்நாடு படுமோசம்
சென்னை: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் தருவதில் கர்நாடகம் நாட்டிலேயே முன்னணியில் இருப்பதாக தேசிய ஆர்.டி.ஐ. விருதுகள் செயலகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் உள்ள தகவல் அறியும் கமிஷன்களில் செயல்பாடுகளைக் கண்காணித்து அதற்கேற்ப ரேங்கிங் தரும் பணியில் ஆர்.டி.ஐ. விருதுகள் செயலகம் ஈடுபட்டுள்ளது. இது ஒரு என்ஜிஓ அமைப்பாகும்.
இந்த நிறுவனம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் தருவதில் நாட்டிலேயே கர்நாடகா தகவல் கமிஷனன்தான் முன்னணியில் இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வில் மொத்தம் 35,000 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில், ஒட்டுமொத்த மக்கள் திருப்தியில், 55 சதவீதத்தை கர்நாடகா பெற்றுள்ளதாம்.
இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு 51 ஆயிரத்து உத்தரவுகளை தகவல் அறியும் ஆணையங்கள் பிறப்பித்துள்ளன. இதில் தமிழ்நாடு, உ.பி, சிக்கிம் ஆகிய மாநிலங்கள் இடம் பெறவில்லை.
தமிழக தகவல் ஆணையம் 40 ஆயிரம் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாக கூறியுள்ளபோதிலும், இதுவரை 900 உத்தரவுகளின் நகல்களை மட்டுமே அது வழங்கியுள்ளது. அதேபோல, உ.பி. மாநிலம் எந்த உத்தரவு நகலையும் வழங்கவில்லை. சிக்கிம் விவகாரத்திலும் இதே கதைதான். இதனால்தான் இந்த மூன்று மாநிலங்களையும் இந்த கணக்கில் சேர்க்கவில்லையாம்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications