சென்னை, மதுரை, திருச்சியிலிருந்து சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள்
சென்னை: சபரிமலை சீசனையொட்டி மதுரை, சென்னை, திருச்சியிலிருந்து சபரிமலைக்கு சிறப்புப் பேருந்துகளை தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் இயக்கவுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஐயப்ப பக்த கோடிகளின் வசதியை முன்னிட்டு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை செல்வதற்கு தமிழகத்தின் பல பகுதியில் இருந்தும் மற்றும் புதுவையில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்கி வருகின்றது.
அதே போல் இந்த ஆண்டும் ஐயப்ப பக்த கோடிகள் பம்பை செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட 6 பஸ்கள் கூடுதலாக உரிமம் பெற்று மொத்தம் 40 பஸ்கள் கீழ்க்கண்ட இடங்களில் இருந்து பம்பைக்கு 15-ந் தேதி முதல் ஜனவரி 20-ந் தேதி வரை இயக்கப்பட உள்ளது.
சென்னை-பம்பை (வழி) குமுளி- 30 பஸ்கள், புதுவை-கடலூர்-பம்பை (வழி) குமுளி, திருச்சி-பம்பை (வழி) குமுளி, மதுரை- பம்பை (வழி) குமுளி, செங்கோட்டை-பம்பை (வழி) புனலூர்.
அனைத்து அரசு விரைவுப் போக்குவரத்து கழக ஓ.டி.ஆர்.எஸ். மூலம் இயங்கும் முன்பதிவு மையங்களில் பம்பை செல்லவும் திரும்ப வருவதற்கும் முன்பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications