நவ. 28-ல் கலைமாமணி விருது விழா!
2007 ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது வழங்கும் விழா தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் வரும் 28ஆம் தேதி நடக்கிறது.
சென்னை கலைவானர் அரங்கில் நடக்கும் இந்த விழாவில் திரையுலகம் மற்றும் கலையுலகைச் சேர்ந்த கலைஞர்கள் திரளாகப் பங்கேற்கிறார்கள்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், கலைத்துறையில் செயற்கரிய சேவை புரிந்த கலைஞர்களை சிறப்பிக்கும் பொருட்டு மாநில அளவிலான கலைமாமணி விருதினை வழங்கி வருகின்றது. அவ்வகையில் 2007 ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெறும் 71 சிறந்த கலைஞர்களின் பட்டியலை, தமிழக முதல் அமைச்சர் கருணாநிதி ஏற்கனவே அறிவித்துள்ளார். அந்த கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா, 28.11.2009 அன்று மாலை 6 மணிக்கு, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது.
இந்நல்விழாவுக்கு, முதல் அமைச்சர் கருணாநிதி தலைமையேற்று, கலைஞர்களுக்கு கலைமாமணி விருதும், கலைமாமணி விருதை ஏற்கனவே பெற்ற மூத்த கலைஞர்கள் 3 பேருக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் பொற்கிழித் தொகையும், சிறந்த நாடகக் குழுவுக்கு சுழற்கேடயமும், சிறந்த கலை நிறுவனத்துக்கு கேடயமும் வழங்கிச் சிறப்பிக்க இசைவு தந்துள்ளார்.
இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு இயல் இசை மன்றம் செய்து வருகின்றது", என அக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications