வைரமுத்து கவிதைகள் கன்னடத்தில் மொழிபெயர்ப்பு
Subscribe to Oneindia Tamil
கவியரசு வைரமுத்து எழுதியுள்ள கவிதைகளில், 33 கவிதைகளை கன்னடத்தில் மொழிபெயர்த்து பெங்களூரில் உள்ள கிறிஸ்து பல்கலைக்கழகம் வெளியிடுகிறது.
பெங்களூர் மாநிலக் கல்லூரி கன்னடப் பேராசிரியர் மலர்விழி இந்தக் கவிதைகளை மொழி பெயர்த்துள்ளார்.
பெங்களூர், ஒசூர் சாலையில் அமைந்துள்ள கிறிஸ்து பல்கலைக்கழக அரங்கில் நாளை நடைபெறும் விழாவில், மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகள் வெளியிடப்பட உள்ளன.
வைரமுத்து அதை வெளியிடுகிறார். பல்கலைக்கழக துணை வேந்தர் அருட்தந்தை தாமஸ் மேத்யூ, கன்னடக் கவிஞரும் நாடக ஆசிரியருமான சந்திரசேகர கம்பாரா, மூத்த கன்னட எழுத்தாளர் சேஷநாராயணா ஆகியோர் பங்கேற்கின்றனர்.












Click it and Unblock the Notifications