அரசு சித்த மருத்துவனையில் விரைவில் மசாஜ் சிகிச்சை!
நெல்லை: நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நீராவி குளியல், மசாஜ் உள்ளிட்ட சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதற்காக ரூ.80 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டப்படுகிறது.
கல்லூரியில் மாணவர்களுக்கு கம்யூட்டர் பயிற்சி அளிக்க ரூ.10 லட்சம் ஓதுக்கப்பட்டு ஆய்வகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
பக்கவாதம், முடக்குவாதம், கை, கால், உடல் வலி, உடல் கொழுப்பு குறைத்தல் போன்ற சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு நவீன சிகிச்சைகள் அளிக்க வசதியாக மசாஜ், நீராவி குளியல், நடை பயிற்சி (டிரேட் மில்), உடற்பயிற்சி சைக்கிள் உள்ளிட்ட கருவிகள் வழங்க கல்லூரி நிர்வாகம் சார்பில அரசுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டது.
இதனை ஏற்று அனைத்து நவீன கருவிகளையும் வழங்க அரசு ஒப்புதல் அளித்தது. அதன் தொடர்ச்சியாக நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரிக்கு 2 நீராவி குளியல் கருவிகள் வந்துள்ளது. இம்மாத இறுதிக்குள் மீதமுள்ள கருவிகள் வழங்கப்பட்டு விடும் எனவும் இதன் மூலம் வசதியானவர்கள் மட்டும் பெற்று வந்த உயர் சிகிச்சைகள் ஏழைகளுக்கும் இலவசமாக கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சிகிச்சைகளை ஓரே இடத்தில் மேற்கொள்ள வசதியாக மருத்துவக் கல்லூரி வாளகத்தில் 80 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. விரைவில் பணிகளை முடித்து நோயாளிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று கல்லூரி முதல்வர் சவுந்திராஜன் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications