கலிலியோவின் காணாமல்போன விரல்கள் மீட்பு- இத்தாலிய அருங்காட்சியம் தகவல்

கலிலியோ இறந்து 95 ஆண்டுகள் கழிந்த பின், 1737ம் ஆண்டில் அவரது உடலின் எஞ்சிய பாகங்கள், கல்லறையிலிருந்து மீண்டும் வெளியே எடுக்கப்பட்டு, சாண்டா குரோஸ் தேவாலயத்தில் அமைக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் மறுஅடக்கம் செய்யப்பட்டது.
அப்போது, சிலர் கலிலியோ மீதான ஆர்வமிகுதியால் கல்லறையிலிருந்த மூன்று விரல்கள் மற்றும் பற்கள் ஆகியவற்றை எடுத்துச் சென்றனர். அதில் ஒரு விரல் உடனடியாக மீட்கப்பட்டு புளோரன்சில் உள்ள அறிவியல் வரலாற்று அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், கலிலியோவின் இரண்டு விரல்கள் (பெரு விரலும், நடுவிரலும்) மற்றும் பற்களை மட்டும் இத்தாலியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்கள் சொத்தாகக் கருதி வைத்திருந்தனர். இவை ஒரு குடுவையில் பத்திரப்படுத்தப்பட்டு, தலைமுறை தலைமுறையாக ஒரே குடும்பத்தினரிடம் இருந்து வந்தது.
ஒரு கட்டத்தில், பின்னாள் வந்த தலைமுறைக்கு இந்த குடுவையில் இருப்பது என்னவென்பது தெரியாமல் அவர்களாலேயே வெளி நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுவிட்டது. 1905ம் ஆண்டுவாக்கில் கலிலியோவின் இரண்டு விரல் மற்றும் பற்கள் காணாமல் போய்விட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் முடிவு செய்துவிட்டனர்.
இந்நிலையி்ல், சமீபத்தில் ஒரு ஏலத்தின் போது இக்குடுவையை கலைப்பொருள் சேகரிப்பாளர் ஒருவர் வாங்கியுள்ளார். இதுபற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள அருங்காட்சியக இயக்குனரை அவர் அணுகியுள்ளார்.
18ம் நூற்றாண்டைச் சேர்ந்த அக்குடுவையின் வரலாற்றுப் பின்னணி மற்றும் விற்பனை ஆவணங்கள் ஆகியவற்றை அருங்காட்சிய ஆய்வாளர்கள் ஆய்வு செய்து பார்த்ததில் அது கலிலியோவினுடையது என தெரியவந்தது. மேலும் குடுவையில் கலிலியோவின் உருவம் பொறித்த அடையாளமும் கிடைத்துள்ளது.
அடுத்த சில மாதங்களில் இவை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று அருங்காட்சிய இயக்குனர் கலூஸி தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications