துபாயில் ரிதம் ஈவன்ட்ஸின் மாபெரும் இசை விழா
துபாய்: துபாய் ரிதம் ஈவன்ட்ஸ் அமைப்பின் ஏற்பாட்டின் பேரில் அட்டகாசமான, அபாரமான இசை விழா நடைபெற்து.
டிசம்பர் 11ம் தேதி துபாய், இந்தியன் உயர் நிலைப் பள்ளி, ஷேக் ரஷீத் ஆடிட்டோரியத்தில் இந்த விழா நடைபெற்றது.
மாலை 4.30 மணிக்குத் தொடங்கி இரவு 11 மணி வரை இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ரிதம் ஈவன்ட்ஸ் சார்பில் அதன் இயக்குநரும், துபாய் தமிழ்ச் சங்க நிறுவனர் மற்றும் காப்பாளருமான சந்திரா ரவி, துபாய் தமிழ்ச் சங்க நிறுவனர் மற்றும் இயக்குநர் சபேசன் ஆகியோரின் ஏற்பாட்டில், இந்த நிகழ்ச்சி நடந்தது.
15 வயதான நிவேதிதாவின் தலைமையில் சிறார்களின் நடனத்தோடு நிகழ்ச்சி தொடங்கியது. பின்னர் திண்டுக்கல் லியோனி தலைமையில் மாபெரும் பட்டிமன்றம் நடைபெற்றது.
துபாயைச் சேர்ந்த பொற்செல்வி, ஜெசீலா ரியாஸ், கார்த்திக் ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.
பின்னர் தேனிசைத் தென்றல் தேவாவின் இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. கோலங்கள் புகழ் ஷியாம், பிரியா பிரகாஷ், பிரியதர்ஷினி, பிரகாஷ் ஆகிய கலைஞர்கள் இதில் கலந்து கொண்டு பாடல்களைப் பாடினர்.
நிகழ்ச்சியை ஆசிப் மீரான் தொகுத்து அளித்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
விரைவில் இந்த நிகழ்ச்சி ராஜ் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.
துபாய் வாழ் தமிழ் மக்களுக்கான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அளிக்கும் சீரிய சேவையில் ரிதம் ஈவன்ட்ஸ் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications