குவைத்தில் கல்வி, விழிப்புணர்வு கருத்தரங்கம்

Subscribe to Oneindia Tamil

குவைத்: குவைத்தில் தமிழ்ர்கள் மத்தியில் இஸ்லாமிய மற்றும் சமுதாய பணிகள் செய்துவரும் இஸ்லாமிய வழிகாட்டி மையம், மாபெரும் கல்வி மற்றும் பைத்துல்மால் விழிப்புணர்வு கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்து வருகின்றது.

குவைத்தில் ஹிஜ்ரா வருடப்பிறப்பு விடுமுறையை முன்னிட்டு வருகின்ற 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இந்நிகழ்ச்சிகள் குவைத்தின் ஃபஹாஹீல், செனாயியா மற்றும் ரவ்தா ஆகிய பகுதிகளில் நடைபெற இருக்கின்றன.

இந்நிகழ்ச்சிகளில் தமிழகத்திலிருந்து வருகை தரும் பன்னூலாசிரியர் எஸ்.எம்..ஹிதாயதுல்லாஹ் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகின்றார்.

நிகழ்ச்சி 1:

இடம்: ஜபர்கான் பின் பத்ர் ஜும்ஆ பள்ளிவாசல், பஹாஹீல் - செனாயியா
நாள்: 18.12.2009 வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகைக்குப்பின்
தலைப்பு: பைத்துல்மால் - ஏன்? எதற்கு? எப்படி?

நிகழ்ச்சி 2:

இடம்: ஐஜிசி பஹாஹீல் அலுவலகம்
நாள்: 18.12.2009 வெள்ளிக்கிழமை மாலை 5.30 முதல் 7.30 வரை
தலைப்பு: பைத்துல்மால் - ஐயமும் தெளிவும்

நிகழ்ச்சி 3:

இடம்: ஜம்யிய்யத்து இஸ்லாஹி உள்ளரங்கம், ரவ்தா
நாள்: 19.12.2009 சனிக்கிழமை மாலை 7.30 முதல் 9.30 வரை
தலைப்பு: சமுதாயமே விழித்துக்கொள்! கல்வியை தேடிக்கொள்!!

இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள பெண்களுக்கு தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஃபஹாஹீல், செனாயியா, மங்காஃப், அபூஹலீஃபா, பின்தாஸ் போன்ற குவைத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வாகன வசதியையும் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு செய்துள்ளது.

மேலதிக விபரங்களுக்கு இஸ்லாமிய வழிகாட்டி மையத்தின் (IGC) தொலைபேசி எண்களை (23925612, 65658461, 55488494, 97349385, 22470159) தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+