ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுக்க கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

தென்காசி: மத்திய அரசு 2011ல் நடத்த இருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பை ஜாதி வாரியாக நடத்த வேண்டும் என்று மள்ளர் இலக்கிய கழக நிறுவனர் அண்ணாமலை கூறினார்.

தென்காசியில் நேற்று அவர் நிருபர்களிடம் பேசுகையில்,

மத்திய அரசு 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவில் 1881ம் ஆண்டுதான் தேசிய அளவில் மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட்டது. அப்போது ஜாதி, மதம், மொழி அடிப்படையில் கணக்கெடுக்கப்பட்டது.

2011ம் ஆண்டு ஜாதி வாரியாக கணக்கெடுக்க முயற்சிகள் எடுக்கப்படவில்லை. வேலைவாய்ப்பு மற்றும் அரசியலை உள்ளடக்கிய விஷயமாக ஜாதி உள்ளது. கல்வி, பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளவர்களை மேம்படுத்த ஜாதி வாரியாக கணக்கெடுப்பது அவசியம்.

எனவே 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை ஜாதி வாரியாக எடுக்க வேண்டும்.

ஏப்ரல் 25ம் தேதி மதுரையில் உலக தேவேந்திர குல வேளாளர்களின் மாநாடு பேரணி நடக்கிறது. தேவேந்திர குல வேளாளர் இனத்தின் உட்பிரிவுகளை ஓரே இனமாக தேவேந்திர குல வேளாளர் என அரசு அறிவிக்க வேண்டும் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+