சீனிவாசராவ் நினைவு மணிமண்டபம்-ஸ்டாலின் திறக்கிறார்

Subscribe to Oneindia Tamil

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் நவம்பர் 14ம் தேதி அன்று முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரான சீனிவாசராவ் நினைவு மணிமண்டபத்தை துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளுக்கு உள்ள உரிமைகளை பெற்றுத்தர பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் சீனிவாசராவ். அவர் இறந்த பின்பு, அவருக்கு திருத்துறைப்பூண்டியிலேயே நினைவிடம் அமைக்கப்பட்டது.

அரசு சார்பில் அவருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து சீனிவாசராவுக்கு நினைவு மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் கருணாநிதி உறுதியளித்தார்.

அதன்படி, திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகே செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் ரூ. 25 லட்சம் செலவில் சீனிவாசராவ் நினைவு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.

இந்த மணிமண்டபத்தை நாளை ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+