குவைத்தில் நாளை சிறப்பு கருத்தரங்கம்
Subscribe to Oneindia Tamil
மிர்காப்: குவைத், மிர்காப் பகுதியிலுள்ள 'திருச்சி உணவகம், மர்ஹூம் ஜி.எம். பனாத்வாலா' நினைவரங்கில் நாளை (வெள்ளிக்கிழமை) சிறப்பு கருத்தரங்க நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
'குவைத் காயிதெ மில்லத் பேரவை' சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கருத்தரங்கில் பாபர் மஸ்ஜித் நினைவு, நீதிபதி லிபரான் கழிஷன் அறிக்கை, இந்திய அரசின் நடவடிக்கை, இந்திய முஸ்லிம்களின் அணுகுமுறை ஆகிய தலைப்புகளில் கருத்துகள் முன்வைக்கப்படும்.
நாளை மாலை 6 மணிக்கு துவங்கு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேரவை அமைப்பாளர் மருத்துவர் கே.எஸ். அன்வர் பாட்சா உள்ளிட்டோர் செய்து வருகின்றனர். இதுகுறித்து மேலும் தகவல் பெற (+965) 97862316 / 66641434 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications