சென்னை புத்தக கண்காட்சி: 5 ஆவணப் படங்கள் ஒரே 'டிவிடி'யில்
சென்னை: சென்னை புத்தக கண்காட்சியில் ஐந்து ஆவணப் படங்கள் ஒரே 'டிவிடி'யில் பதிவு செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் சென்னையில் 33 ஆண்டுகளாக மாபெரும் புத்தகக் கண்காட்சி நடந்துவருகிறது. இந்தாண்டு புத்தக கண்காட்சி ஜனவரி 10ம் தேதி வரை நடக்கிறது.
சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜான்ஸ் பள்ளி வளாகத்தில் விசாலமான 11/2 லட்சம் சதுரடி பரப்பளவில் அமைக்கப்பட்ட 606 அரங்குகளில் மொத்தம் 360 நிறுவனங்கள் நூல்களை காட்சிக்கும், விற்பனைக்கும் வைத்துள்ளன.
இதில் சென்னை கெருகம்பாக்கத்தில் உள்ள 'பாடம் பதிப்பக'மும் தனது அரங்கை (கடைஎண்: 59) அமைத்துள்ளது. இந்த அரங்கில் முதன்முறையாக ஐந்து விழிப்புணர்வு ஆவணப் படங்கள் ஓரே 'டிவிடி'யில் பதிவு செய்யப்பட்டு விற்கப்படுகிறது. பாடம் பதிப்பகத்தின் முந்தைய இதழ்களும் கிடைக்கும்.
வார நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. நுழைவு கட்டணம் ரூ.5
கண்காட்சி நடைபெறும் 12 நாட்களிலும் தினசரி மாலை 6 மணி முதல் 8.30 மணி வரை கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.












Click it and Unblock the Notifications