துபாயில் கிராண்ட் 2009: மாபெரும் இசை நிழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில், ரிதம் ஈவன்ட்ஸ் ஏற்பாட்டின் பேரில் கிராண்ட் 2009 என்ற மாபெரும் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
டிசம்பர் 11ம் தேதி மாலை 4 மணிக்கு துபாய், செயின்ட் மேரீஸ் சர்ச் எதிரில் உள்ள, இந்தியன் உயர் நிலைப் பள்ளி, ஷேக் ரஷீத் ஆடிட்டோரியத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திண்டுக்கல் லியோனி தலைமையில் நகைச்சுவை பட்டிமன்றமும், தேனிசைத் தென்றல் தேவாவின் இன்னிசை மழை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
நடிகர், பாடகர், இசையமைப்பாளர் ஷ்யாம், நடிகர்-பாடகர் விஷ்வா, திரைப்பட பின்னணிப் பாடகி பிரியதர்ஷினி, திரைப்படம் மற்றும் டிவி சீரியல் பாடகி பிரியா பிரகாஷ், இசையமைப்பாளர் பிரகாஷ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
மேலும் விவரமறிய விரும்புவோர் 050-6370472 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இமெயில் முகவரி - [email protected]












Click it and Unblock the Notifications