துபாயில் முஹர்ரம் சிறப்பு நிகழ்ச்சி அனுசரிப்பு

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாய், டேரா, அல் பராஹாவில், சக்கீனா மஜ்லிஸில், முஹர்ரம் ஆசூரா சிறப்பு தின நிகழ்வு நடைபெற்றது..

சமய நல்லிணக்க அறிஞர் எம்.ஜே.இக்பால் பேசுகையில்,

ஆஷீரா முஹர்ரம் 10ல்,1300 ஆண்டுகளுக்கு முன் கர்பலாவில் நபிகள் நாயகம் அவர்களின் உயிரான அவர்களால் நேசிக்கப்பட்ட, இமாம் ஹூசைன் மக்களாட்சி தத்துவமே உயர்ந்தது சிறந்தது என்றும், நிலைக்க வேண்டியது என்பதை உறுதிப்படுத்த வன்முறையாக ஆட்சி புரிந்த முஸ்லிம் என்ற பெயரில் முடியாட்சி நடத்தி கொண்டு இருந்த மன்னனையும், அந்த மாபெரும் படையினையும் எதிர்த்து தங்களோடு, குடும்பம் சிறார்கள் குழந்தைகள் உட்பட உணவு இன்றி பல நாட்கள் சொட்டு தண்ணீர் கூட இல்லாமல்,கொள்கைக்காக போரடி இமாம் ஹூசைனும் அவர்களின் குடும்பமும் நண்பர்களும் இன்னுயிர் நீத்த தியாகத்தினை மனம் உருகி, வரலாற்று ஆதாரங்களுடன் விள்க்கி பேசினார்.

இறைவனின் வேதமும் நபிகள் நாயகம் அவர்களின் வழிகாட்டுதலும் இமாம் ஹூசைனின் ஒப்பற்ற தியாகமும் எதேச்சிகாரத்தை முறியடித்து மக்களாட்சி தத்துவத்திற்கு உயிர்கொடுத்ததை விளக்கி இமாம் ஹூசைன் அவர்கள் தியாகத்தால் இஸ்லாமிய தத்துவம் புத்துயர் பெற்றது. அவர்களின் தியாகம் இறவாமல் இன்றும் கோடிக்கணக்கான மக்கள் நினைத்து போற்றி வருவதையும் எடுத்துக் கூறினார்.

நாட்டில் மக்களாட்சி முறையும் ஜனநாயகமும் நிலைத்து நீடிப்பதற்கு ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும் என்பதை முஹர்ரம் 10ம் நாள் நினைவுபடுத்துவதையும் கூறினார்.

நிகழ்ச்சியில் கவிஞர் இம்தியாஸ், இலக்கிய ஆய்வாளர் முஹைதீன் பாஷா, பேராசியர் முஜிபுர் ரஹமான், தோசிபா நிறுவன பொதுமேலாளர் அபூபக்கர், ஆலிம் ஹம்ஜா சக்காஃபீ ஆகியோர் பேச, ஆலிம் ஜமால் அவர்களின் பிரார்த்தனையுடன் நிறைவுற்றது. இந்த நிகழஅச்சியில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+