டிச.31- சந்திரகிரகணத்தால் திருச்செந்தூர் கோயில் நடைசாத்தப்படும்
திருச்செந்தூர்: ஆங்கில புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவில் சந்திர கிரகணத்தை ஒட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நடை சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்திர கிரகணம் நாளை மறுநாள் இரவு 11.32 மணிக்கு தொடங்கி ஜனவரி 1ம் தேதி அதிகாலை 1.20 மணிக்கு முடிவடைகிறது.
இதன்காரணமாக நாளைமறுநாள் இரவு 8 மணிக்கே கோவில் நடை மூடப்படுகிறது. 9.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் மட்டும் நடத்தப்பட்டு, இரவு 10.30 மணிக்கு கோவிலின் உள்கதவு மூடப்படும்.
அதன்பிறகு சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். மறுநாள் 1ம் தேதி அதிகாலை 1.20 மணிக்கு சந்திர கிரகணம் முடிவடைந்ததும் 1.30 மணிக்கு உள் கதவுகள் திறக்கப்படும். பின்னர் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
இதைத்தொடர்ந்து அதிகாலை 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் மற்ற பூஜைகளும் நடைபெறும். காலை 5 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications