தமிழகத்தை சேர்ந்த 16 ஐ.ஏ.எஸ்கள் தயார்!
சென்னை: 2008ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வென்று உத்தரகண்ட் மாநிலம் முசெளரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி நிர்வாக பயிற்சிக் கழகத்தில் ஓராண்டு பயிற்சி முடித்த தமிழகத்தைச் சேர்ந்த 16 ஐஏஎஸ் அதிகாரிகள் பல்வேறு மாநிலங்களில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இதில் 5 பேர் பெண்கள் ஆவர். இவர்களில் மரியம் பர்ஸானா சாதிக், லலிதா லட்சுமி ஆகியோருக்கு தமிழ்நாடு கேடர் பதவியே கிடைத்துவிட்டதால் சொந்த மாநிலத்திலேயே ஐஏஎஸ் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மற்ற 14 பேருக்கு வெவ்வேறு மாநிலங்களில் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்களது பெயர்-ஒதுக்கப்பட்ட மாநில விவரம்:
1. சிபி சக்கரவர்த்தி (மத்தியப் பிரதேசம்)
2. ராஜேந்திர சோழன் (அஸ்ஸாம்)
3. விஸ்வநாதன் (அஸ்ஸாம்)
4. வினோத் (அஸ்ஸாம்)
5. ஐரீன் சிந்தியா (மத்தியப் பிரதேசம்)
6. ராதாகிருஷ்ணன் (மகாரஷ்டிரம்)
7. பரமேஸ்வரன் (ராஜஸ்தான்)
8. ரவீந்திரன் (மராட்டியம்)
9. விஜயேந்திர பாண்டியன் (உத்தரப் பிரதேசம்)
10. மது ஷாலினி (மத்தியப் பிரதேசம்)
11. அசோக் (சண்டிகர்)
12. முத்துக்குமார் (ஒரிஸ்ஸா)
13. என்.ஜி.ராஜமாணிக்கம் (கேரளா)
14. தீபா (கர்நாடகா)
கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இருந்து ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இந்த நிர்வாகப் பணித் தேர்வுகளில் வெல்வது அதிகமாகி வருகிறது.
ஆனால், ஐ.எப்.எஸ். (இந்திய வெளிநாட்டு பணி) பணிக்கு தேர்வு செய்யப்படுவது மிகவும் அரிதாகவே உள்ளது. கடந்த 2008ம் ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து அனிதா நந்தினி, பிஜய் செல்வராஜ், என்.சுபாஷினி ஆகிய மூவர் மட்டுமே ஐ.எப்.எஸ். வென்றது குறிப்பிடத்தக்கது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications