ஆரியங்காவு வனப்பகுதியில் பிரசவத்தின் போது தாய், சேய் யானைகள் பலி

தமிழக-கேரள எல்லையான ஆரியங்காவு வனப்பகுதியில் உள்ள ராஜகூப்பு எனும் பகுதியில் ஐந்து யானை குழி என்ற இடம் உள்ளது. இந்த இடத்தில் கர்ப்பமான காட்டு யானை ஓன்று குட்டி போட்டு கொண்டிருந்த நிலையில் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து வனத்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தபோது 30 வயது பெண் யானை குட்டி போட்டு பாதி நிலையில் இறந்து கிடப்பது கண்டு தென்மலை டிஎப்ஓ சலீம்க்கு தகவல் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து புனலூர் கால்நடை மருத்துவமனை மருத்தவர் தலைமையில் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டது.
கர்ப்பிணி யானை குட்டி ஈன்ற நிலையில் இந்த வனப்பகுதியில் இறந்த கிடந்த சம்பவத்தை கேள்விபட்டு அப்பகுதியி்ல் ஏராளமானோர் திரண்டு பெண் யானைக்கும், அதன் குட்டிக்கும் அஞ்சலி செலுத்தினர்.
இதுகுறித்து மருத்துவர் குழு கூறுகையில் அதிகளவு ரத்தபோக்கு ஏற்பட்டதால்தான் தாயும், சேயும் பலியாகியதாக தெரிவித்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications