அவல நிலையில் 50 வயது செங்கோட்டை நூலகம்
செங்கோட்டை: செங்கோட்டை பொது நூலகம் 50 ஆண்டு கால பழமை வாய்ந்தது. இந்த நூலகக் கட்டிடம் காலத்தால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது.
நூலகக் கட்டிடத்தின் பழுது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் எந்த நேரம் என்னவாகுமோ என்ற பயத்தில் தான் வாசகர்கள் படிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் அமைதியாக படிக்கமுடியாமல் வாசகர்கள் அவதிப்படுகின்றனர்.
கடந்த மாதம் குற்றாலம் வந்த சட்டப்பேரவை குழுவினரிடம் இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து அக்குழுவினர் செங்கோட்டை நூலகத்தை ஆய்வு செய்தனர். உடனடியாக நூலகக் கட்டிடத்தை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள ஒரு கட்டிடத்திற்கு மாற்ற மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்தனர்.
ஆனால் இன்று வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் நூலகக் கட்டிடம் தண்ணீரில் தத்தளித்து வருகிறது. இதைப் பார்க்கும் நூலக நேயர்கள் கண்ணீரில் மூழ்கியுள்ளனர்.
மழையில் நனைந்த ஏராளமான புத்தகங்களை உலர வைத்து வருகின்றனர். எனவே, நூலகக் கட்டிடத்தை உடனடியாக மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் விரும்புகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications