செல்போன் முதலில், அப்புறம் தான் பாய்ஃப்ரண்ட்!
மெல்போர்ன்: மொபைல் போனா, பாய் ஃப்ரண்டா என்று கேட்டால், மொபைல் போனைத்தான் முதலில் தேர்ந்தெடுப்போம் என சர்வே ஒன்றில் பெரும்பாலான பெண்கள் கருத்து கூறியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் உள்ள பெண்கள் தங்களின் மிக முக்கியமான சொத்தாக எதைக் கருதுகிறார்கள் என கண்டறிய பிரிட்டன் நிறுவனம் ஒன்று சமீபத்தில் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தியது.
இதில் 10க்கு 4 பெண்கள், 'பாய் ஃபிரண்ட் இல்லாமல் கூட வாழ்ந்துவிடுவோம். ஆனால் செல்போன் இல்லாமல் வாழவே முடியாது' என்று கூறியுள்ளனர்.
சர்வேயில் பங்குபெற்ற பெண்களில் பெரும்பாலோனோர் தங்களின் தாய் தான் மாற்றே இல்லாத சொத்து எனக் கூறியுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக இளமைக்கால புகைப்படங்களும், மூன்றாவதாக மொபைல் போன்களையும் தங்களின் சொத்தாக பெண்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அம்மா, மொபைல் போன்றவற்றை தவிர்த்து நண்பர்களையும் தங்கள் சொத்தாக பலர் கூறியுள்ளனர். பாய் ஃபிரண்டுகளை விட பொதுவான நண்பர்களைத் தான் அதிக பெண்கள் உண்மையில் விரும்புவதாக கூறியுள்ளனர்.
நகைகள், செல்லப் பிராணிகள், லேப்டாப், முடியலங்கார கருவிகள் போன்றவற்றை தங்களின் பிரதான சொத்தாகக் கூறிய பெண்களும் உள்ளனர்.
இந்த கருத்துக்கணிப்பில், 'பணத்துக்காக பாய் ஃபிரண்டுகளை தூக்கி வீசுவீர்களா?' என கேட்கப்பட்ட போது, 'ஒரு மில்லியன் டாலர் ரொக்கமாக தந்தால் யோசிக்கலாம்' என பலர் பதில் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications