நெல்லையில் அறிவியல் விழிப்புணர்வு கண்காட்சி ரயில்
இந்திய அறிவியல் தொழில் நுட்ப கழகத்தின் சார்பில் நாடு முழுவதும் அறிவியல் விழிப்புணர்வை பொது்மக்களிடம் ஏற்படுத்தும் விதமாக கடந்த அக்டோபர் மாதம் 2ம் தேதி டில்லியில் இருந்து அறிவியல் கண்காட்சி ரயில் புறப்பட்டது.
14 பெட்டிகள் அடங்கிய இந்த ரயிலில் உயிரியல், வேதியில், இயற்பியல், வானவியல், பூகோளம் போன்ற அறிவியல் துறையின் மாதிரிகள் மற்றும் முக்கிய வரைபடங்கள் இடம் பெற்றுள்ளன.
இக்கண்காட்சி சிறப்பு ரயில் திருவனந்தபுரத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு நேற்று அதிகாலை நெல்லை ரயில்வே ஸ்டேஷன் 5வது பிளாட்பாரத்திற்கு வந்தது.
காலை 9 மணிக்கு இக்கண்காட்சி ரயிலை கலெக்டர் ஜெயராமன் துவக்கி வைத்தார். அவருடன் ரயில்வே மேலாளர் கல்யாணி, மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 6 ஆயிரம் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கண்காட்சி ரயிலை பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications