செம்மொழி மாநாடு-வெளிநாடுகளிலிருந்து 32 பேராளர்கள்
சென்னை: கோவையில் நடைபெற உள்ள உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் 32 வெளிநாடுகளைச் சேர்ந்த பேராளர்கள் பங்கேற்க உள்ளதாக கவியரசு வைரமுத்து கூறினார்.
மாநாட்டுக்கு வரும் பேராளர்களுக்கான தொடர்புக் குழுக் கூட்டம் சென்னையில் அதன் தலைவர் வைரமுத்து தலைமையில் நடந்தது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கோவையில் நடைபெற உள்ள உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டுப் பேராளர்களை வரவேற்பது, அவர்களுக்கான வசதிகளைச் செய்து தருவது குறித்து எங்கள் குழுவின் முதல் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 32 வெளிநாடுகளைச் சேர்ந்த பேராளர்கள் பங்கேற்க உள்ளனர்.
பங்கேற்க விரும்பும் ஆய்வாளர்களும், ஆர்வலர்களும் வரும் 31ம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம். பதிவு முடிந்த பிறகே வெளிநாடுகளில் இருந்து எத்தனை பேர் பங்கேற்பர் என்பதை சரியாகக் கூற முடியும்.
பேராளர்களை தங்க வைப்பது உள்ளிட்டவற்றுக்கான நிதியை அரசே அளிக்கும். இந்தக் குழுவில் எடுத்த முடிவுகள் குறித்து முதல்வர் கருணாநிதியிடம் தெரிவித்து ஆலோசனை பெறப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications