எப்போது பொங்கல் வைக்கலாம்?
பொங்கல் திருநாளான நாளை பொங்கல் வைக்க மாலை 3.30 மணிதான் சரியான நேரம் என்று ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.
தை முதல் நாளான நாளை பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. வீட்டில் மாக்கோலமிட்டு, புதுப் பானையில், புத்தரிசியிட்டு பொங்கல் வைத்து பண்டிகையைக் கொண்டாடுவது தமிழர்களின் பண்பாடாகும்.
வழக்கமாக அதிகாலையில்தான் பொங்கல் வைப்பது வழக்கம். அதாவது தை மாதம் பிறக்கும் நேரத்தில் பொங்கலிடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு மாலையில்தான் தை மாதம் பிறக்கிறது. எனவே பொங்கல் வைக்க மாலை 3.30 மணிதான் சரியான நேரம் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
வழக்கத்தைவிட சற்று வித்தியாசமாக இந்த ஆண்டு நாளை காலை 6.39 மணிக்கு சூரிய உதயம் கழிந்து 22 நாழிகையில் அதாவது மாலை 3.30 மணியளவில்தான் தை மாதம் பிறக்கிறது.
பூராடம் நட்சத்திரம், ரிஷப லக்னத்தில் சூரிய பகவான் பிரவேசிக்கிறார். எனவே அதுவே பொங்கலிட உகந்த நேரம் என்பது ஜோதிடர்களின் கணிப்பு.
தை மாதம் 2-ம் தேதியான 15ம் தேதி சூரிய கிரகணம் நிகழ்கிறது. அன்றைய தினம் பகல் 11.24மணிக்கு வடகிழக்கில் தோன்றி மாலை 3.14 மணிக்கு தென் மேற்கில் கிரகணம் விடுகிறது.
அதேபோல, வாக்கிய பஞ்சாங்கப்படி பார்க்கும்போது, நாளை மாலை 3.32 மணிக்குத்தான் தை மாதம் பிறக்கிறது. திருக்கணித முறைப்படி நாளை மதியம் 12.38 மணிக்கு பிறக்கிறது.
பொங்கல் வைத்து பூஜை செய்வதற்கு உகந்த நேரம் மதியம் 12.38 மணிக்கு மேல் பகல் 1.25 மணிக்குள் ஆகும் என்று இன்னொரு தரப்பு ஜோதிடர்களும் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications