அறுவடைத் திருநாள்-உற்சாக கொண்டாட்டம்

தமிழகத்தில் வீடுகளின் முன் வண்ணமயமான கோலங்கள் போட்டு, மக்கள் குடும்பத்துடன் புத்தாடை அணிந்து பொங்கல் படைத்து வழிபாடு நடத்தினர்.
ஜவ்வரிசி, பால் கலந்து சமைத்த சர்க்கரைப் பொங்கல், வென்பொங்கல் உள்ளிட்டவற்றை மக்கள் உண்டு மகிழ்ந்தனர்.
இன்று மாட்டுப் பொங்கல் கிராமப்புறங்களில் விமரிசையாக கொண்டாடப்படும். மாடுகளை குளிக்க வைத்து பொட்டிட்டு, மாலை சூடி விவசாயிகள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டும் நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் ஏராளமான கலை நிகழ்ச்சிகள் விளையாட்டுப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் விழா நாளை வரை நடைபெறுகிறது. நேற்று பொங்கல் படைத்து வழிபாடு நடந்தைத் தொடர்ந்து நாட்டுப்புற பாடல்கள், காவடியாட்டம், கும்மியாட்டம், கோலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தனன.
ஆந்திராவில் மூன்று நாள் சங்கராந்தி துவங்கிய நிலையில் வீதிகளில் ரங்கோலி வரவேற்பும், வானில் வண்ணவண்ணமாக வட்டமடிக்கு பட்டங்களின் ஆர்ப்பரிப்புமாக மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிராமங்களில் மாடுகளை அலங்கரித்தும் கோழிச்சண்டைகள் நடத்தியும் மக்கள் கொண்டாடுகின்றனர்.
ஆசாமில் அறுவடையை நன்றியுடன் கொண்டாடும் போகலி பிஹூ பண்டிகையை வெல்லமும் தயிரும் கலந்த விதவிதமான உணவுப் பொருட்களுடன் கொண்டாடினர்.
தமிழகம், இலங்கை, போன்ற தமிழர் வாழும் நாடுகளில் மட்டுமல்லாமல் தமிழர்கள் புலம் பெயர்ந்துள்ள பல்வேறு இடங்களிலும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
மேற்குவங்கம், ஒரிசா ஆகிய பகுதிகளிலும் புத்தரிசி பொங்கி இனிப்புகளை வழங்கி மக்கள் அறுவடைத் திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.
உத்தரப்பிரதேசம், குஜராத், மஹாராஷ்டிரா மற்றும் பீகாரில் மகர சங்கராந்தி கொண்டாடப்பட்டது.
மகரசங்கராந்தி தினமாக நேற்று ஹரித்வார் வீதிகளில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் வழிபாடு நடத்தினர். அதிகாலை 6.45 மணிக்கு திரிவேணி சங்கமத்தில் நடைபெற்ற வழிபாட்டில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடினர்.
பிப்ரவரி 12ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் கலந்து கொள்ள ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என லட்சக் கணக்கானோர் ஹரித்வார் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.
சபரிமலையில் மகர ஜோதி:
சபரிமலை ஐயப்ப சுவாமி கோவிலில் இந்த ஆண்டின் மகரவிளக்கு பூஜை நேற்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது.
இந்த பூஜையின்போது சுவாமி ஐயப்பனுக்கு தங்க திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்கார தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடந்தன.
வானில் மகர நட்சத்திரம் உதித்து, பொன்னம்பல மேட்டில் சுவாமி அய்யப்பன் பக்தர்களுக்கு 'ஜோதி' வடிவில் காட்சி தந்தார். இந்த சிறப்பு தரிசனத்துக்காக லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தனர்.
இலங்கையில் இடம்பெயர்ந்த தமிழர்கள்...:
இலங்கையில் போருக்கு பின்னர் இம்முறை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளது. கோயில்களில் விசேஷ பூஜைகள் நடந்தன. மக்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.
எனினும் போர் நடந்த பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து, முகாம்களில் அடைக்கப்பட்டு தற்போது உறவினர்களது வீடுகளில் வந்து வசிக்கும் மக்கள் மத்தியில் இந்த மகிழ்ச்சியைக் காணமுடியவில்லை.
கிழக்கே சம்பூர் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்த நிலையில் கிளிவெட்டி பட்டித்திடல் மற்றும் கட்டைபறிச்சான் போன்ற பகுதிகளில் உள்ள அகதிகள் நலன்புரி முகாம்களில் வாழும் மக்கள் மத்தியிலும் மகிழ்ச்சி தென்படவில்லை.
இந்தத் தைப்பொங்கல் திருநாளிலாவது தங்கள் சொந்த மண்ணைச் சென்றடைந்து பொஙகல் விழாவைக் கொண்டாட அகதிகள் எண்ணியிருந்தனர். ஆனால் அந்த நினைவு வெறும் கனவாகிப் போனதாக அகதிகள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications