கணவர் வீட்டு முன் படு்த்து உண்ணாவிரதம்!

Subscribe to Oneindia Tamil

செங்கோட்டை: பிரிந்து சென்ற காதல் கணவனை சேர்த்து வைக்குமாறு கோரி, கணவனின் வீட்டுமுன் மனைவி உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்.

செங்கோட்டை அருகே கட்டளை குடியிருப்பு வேம்பநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவரது மகள் இளவரசி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வரதராஜனுக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது.

வரதராஜன் வீட்டில் இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால், 5 மாதம் மனைவி வீட்டில் வரதராஜன் குடும்பம் நடத்தினார்.

அப்போது இளவரசிக்கும், வரதராஜனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு வரதராஜன் திடீரென மாயமானார்.

அதிர்ச்சி அடைந்த இளவரசி, வரதராஜன் தன் தாய் சொன்னதை கேட்டு தலைமறைவாகி இருப்பதாக சந்தேகித்தார். மாமியாரிடம் இதுகுறித்து கேட்டபோது சரியான பதில் வரவில்லை.

இதனால் மனமுடைந்து சில நாள் மதுரையில் இருந்தார் இளவரசி. இந்நிலையில் நேற்று செங்கோட்டைக்கு திரும்பிய இளவரசி, வரதராஜன் வீட்டின் முன்பு தரையில் படுத்துக்கொண்டார்.

கணவர் வரதராஜனை தன்னோடு சேர்த்து வைக்கோரி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். கணவரை மீட்கும் வரை உண்ணாவிரதத்தை கைவிட மாட்டேன் என தொடர்ந்து அங்கேயே இருக்கிறார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+