ஆதிச்சநல்லூர், பூம்புகாரில் ஆய்வை தொடர அன்பழகன் கோரிக்கை

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் மற்றும் பெரியார் ஈ.வெ.ராமசாமி நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் ஆதிச்சநல்லூரில் சிறப்பு எதிர்கால திட்டங்களும் என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்களம் பாளையில் நடந்தது.
சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமை வகித்தார். இதில் கலந்து கொண்டு நிதி அமைச்சர் அன்பழகன் பேசுகையில்,
ஆதி்ச்சநல்லூர், அரிக்காமேடு, கம்பம் என தமிழகத்தின் பல இடங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் ஆதிச்சநல்லூரில் மூன்றடுக்கு முதுமக்கள் தாழியும் கிடைத்துள்ளது.
ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட எழுத்துகளை வைத்து பார்க்குமபோது அவை ஹரப்பா, மொகஞ்சதரா நாகரீகத்துடன் தொடர்புள்ளது தெரிகிறது. இடைக்காலத்தில் தமிழ் மொழியை அழிக்க வட்ட மொழி கலக்கப்பட்டது.
அதோடு தமிழ் மொழியின் தனித்தன்மையை காப்பாற்ற தென் தமிழகத்தில் நடைபெறும் ஆராய்ச்சிக்கு வட மாநிலத்தவர்கள் அக்கறை காட்டவில்லை.
தமிழ் வளர்ச்சிக்கு முதல்வர் கருணாநிதி அரும்பாடு பட்டு வருகிறார். ஆதிச்சநல்லூர், பூம்புகார் மற்றும் கொற்கையில் ஆய்வுகளை மீண்டும் தொடர்ந்தால் தமிழனுடைய முழுமையான வரலாறு கிடைக்கும்.
ஆய்வி்ல் ஈடுபடும் எந்த அமைப்புகளுக்கும் மத்திய, மாநில அரசுகள் உறுதுணையாக இருக்கும். ஐப்பான், கொரியா, கிரேக், லத்தீன் ஆகிய மொழிகளுக்கும் தமிழுக்கும் தொடர்பு உள்ளது. தமி்ழ் மொழி குறித்து ஆய்வுகளில் இளைஞர்களும், மாணவர்களும் ஆர்வம் காட்ட வேண்டும் என்றார் அன்பழகன்.












Click it and Unblock the Notifications