துபாயில் கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ் இளைஞருக்கு விருது
துபாயைச் சேர்ந்த வெங்கட்ராமன் மற்றும் விஜி வெங்கட் ஆகியோரின் மகன் ராதாகிருஷ்ணன். இவர ஷார்ஜாவில் உள்ள டெல்லி பிரைவேட் ஸ்கூலில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு படிப்பில் சிறந்து விளங்குவதற்கான துபாய் அரசின் ஷேக் ஹம்தான் பின் ராஷித் அல் மக்தூம் விருது வழங்கப்பட்டது.
விருது வழங்கும் விழாவில் யுனெஸ்கோ தலைவர் ஐரினா பொகாவோ சிறப்பு விருந்தினராக கலந்து கொன்டார்.
ராதாகிருஷ்ணன் படிப்பில் மட்டுமல்லாமல் கூடைப்பந்து, வினாடி வினா, பேச்சாற்றல், இசை, செஸ், டென்னிஸ் ஆகியவற்றில் பல்வேறு பரிசுகளைப் பெற்றுள்ளார். பள்ளியின் வினாடி வினா மையத்திதின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். எப்பொழுதும் 95 சதவீதத்திற்கு குறைந்து மதிப்பெண்கள் பெற்றதில்லை.
ராதாகிருஷ்ணன் இவ்விருது பெற்றது தனக்கு பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். இதற்கு பெரிதும் காரணமாக இருந்த கடவுளுக்கும், தனது பெற்றோர்களுக்கும், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ நண்பர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
பள்ளிப்படிப்புக்குப் பின்னர் லண்டன் பொருளாதாரப் பள்ளியில் சேர்ந்து எதிர்காலத்தில் சிறந்த பொருளாதார நிபுணராவதே தனது லட்சியம் என்றார். நோபல் பரிசு பெறுவதே தனது வாழ்வின் இலட்சியம் எனவும் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
விருது பெற்ற ராதாகிருஷ்ணனுக்கு இவ்வருடம் இலவசமாக கல்வி பயில பள்ளி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. மேலும் பல விருதுகள் பெற துபாய் தமிழ்ப் பெண்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் வாழ்த்தினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications