இன்று கோவையில் உலக தமிழ் இணைய மாநாடு
கோவை: கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரியில் உலக தமிழ் இணைய மாநாடு துவங்கின்றது.
கணினி வாயிலாக தமிழ் எந்த அளவுக்கு உயர்ந்துள்ளது என்பதை அறிய உலக தமிழ் இணைய மாநாடு நடத்தப்படுகின்றது.
இதில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும் கலந்து கொள்கின்றனர்.
இதில், திருக்குறள் வாசித்தல், ஆத்திச்சூடி, பழமொழிகள், ஓவியம் போன்ற பல்வேறு போட்டிகள் கணினி வாயிலாக நடத்தப்பட உள்ளது.
இந்த மாநாட்டினை இன்று முற்பகல் 11 மணிக்கு முதல்வர் கருணாநிதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் சென்னையில் இருந்து தொடங்கி வைக்கிறார்.
மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா முன்னிலை வகிக்கிறார். தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, உலத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தனி அலுவலர் அலாவுதீன், தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் டேவிதார் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்த மாநாட்டில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications