நெல்லையில் தமிழ் ஆட்சி மொழி செயலாக்க பயிலரங்கம்
நெல்லை: தமிழ் ஆட்சி மொழி செயலாக்க பயிலரங்கம் நெல்லையில் இன்று தொடங்குகிறது.
நெல்லை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அனைத்து துறை பணியாளர்களுக்கான தமிழ் ஆட்சி மொழி செயலாக்க பயிலரங்கம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று (17ம தேதி) காலை 10 மணிக்கு நடக்கிறது.
இன்றைய நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் முத்தையா, டி.ஆர்.ரமண சரஸ்வதி, மண்டல தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
நாளைய பயிலரங்க நிகழ்ச்சியில் சேலம் மண்டல துணை இயக்குனர் ராஜேந்திரன், திருச்சி உதவி இயக்குனர் சிவசாமி, மாணிக்கம் உள்பட பலர் பேசுகின்றனர். மாலை 3.30 மணி்க்கு பயிலரங்க நிறைவு விழா நடக்கிறது.
கலெக்டர் ஜெயராமன் தலைமை வகிக்கிறார். தமிழ் வளர்ச்சி இயக்குனர் எழிலரசு சிறப்புரை ஆற்றுகிறார். தமிழ் ஆட்சி மொழி கருத்தரங்கம் கலெக்டர் அலுவலகத்தில் வரும் 19ம் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது.
இதில் பேராசிரியர் ராமையா, வக்கீல் தங்கசாமி, பேட்டை இந்து கல்லூரி முதல்வர் கட்டளை கைலாசம் உள்பட பலர் பேசுகின்றனர்.












Click it and Unblock the Notifications