கால்டுவெல் நினைவு அஞ்சல் தலை மே 7ல் வெளியிடு

Subscribe to Oneindia Tamil

திசையன்விளை: கால்டுவேல் நினைவு தபால்தலை வரும் மே மாதம் 7ம் தேதி வெளியிடப்படும் என தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி தெரிவித்தார்.

திசையன்விளை அருகே உள்ள இடையன்குடியில், தமிழுக்கு அருந்தொண்டாற்றிய பிஷப் கால்டுவெல் வாழ்ந்த இல்லத்தை, நினைவகமாக மாற்ற தமிழக முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து இடையன்குடியில் அவர் வாழ்ந்த இல்லத்தில் ரூ.18 லட்சத்தில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதையொட்டி இல்லத்தை பார்வையிடுவதற்காக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் பரிதிஇளம் வழுதி இன்று காலை நெல்லை வந்தார்.

இடையன்குடியில் கால்டுவெல் வாழ்ந்த இல்லத்தை பரிதி இளம்வழுதி பார்வையிட்டார். செய்திதுறை இயக்குனர் காமராஜ், துணை இயக்குனர் இளங்கோ ஆகியோரும் அமைச்சருடன் இல்லத்தை பார்வையிட்டனர்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் பரிதி இளம்வழுதி கூறுகையில்,

'கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரின் போது ராதாபுரம் தொகுதி எம்எல்ஏ அப்பாவு எழுப்பிய கோரிக்கையை ஏற்று கால்டுவெல் வாழ்ந்த இல்லத்தை அரசு கையகப்படுத்தி நினைவு இல்லமாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த இடத்தை பழமை மாறாமல் பழுதுபார்த்து நினைவு இல்லம் சிறப்பாக அமைய ஏற்பாடு செய்யப்படும்.

வருகிற மே 7ம் தேதி பேராயர் நினைவை போற்றும் வகையில் தபால் தலை வெளியிட உள்ளோம்' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+