செம்மொழி மாநாடு: உலகளாவிய கவிதைப்போட்டி - முதல் பரிசு ரூ. 1 லட்சம்
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி உலகம் தழுவிய அளவில் பிரமாண்ட கவிதைப் போட்டி நடத்தப்படுகிறது. இதில் வெல்வோருக்கு ரூ. 1 லட்சம் பரிசு அளிக்கப்படவுள்ளது.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கான, பொது அரங்க நிகழ்ச்சிகள் அமைப்புக் குழுவின் 2-வது ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி தலைமையில் சென்னையில் நடைபெற்றது.
இதில் கவியரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, உலக அளவிலான கவிதைப் போட்டி நடத்தப்பட உள்ளது. இதற்காக உலக அளவில் விளம்பரம் செய்யப்படும். போட்டி தலைப்பு குறித்த அறிவிப்பும் பின்னர் வெளியிடப்படும்.
முதல் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படும். 2வது பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும், ஆறுதல் பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பற்றி கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற தலைப்பில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.
தற்போது பல்கலைக்கழக அளவில் இப்போட்டிகள் நடந்து வருகின்றன. மாநில அளவிலான போட்டியை மார்ச் முதல் வாரத்தில் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைப்பார்.
வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.20 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.10 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும் என்றார் பொன்முடி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications