புவிவெப்ப மாற்ற விழிப்புணர்வுக்காக விருந்தினர்களுக்கு மரக்கன்று வழங்கிய மணமக்கள்

Subscribe to Oneindia Tamil

Sapling
நெல்லை: நெல்லை நேற்று நடந்த திருமண விழாவில் மணமக்களை வாழ்த்த வந்தவர்களுக்கு இயற்கை பாதுகாப்பை வலியுறுத்தி தாம்பூலத்திற்கு பதிலாக மரக்கன்று வழங்கப்பட்டது.

மேலும் அங்கு பிளாஸ்டிக் டம்பளர்களுக்கு பதிலாக சிறிய அளவிலான மண் குவளைகளும் பயன்படுத்தப்பட்டது பலரையும் கவர்ந்தது.

நாடெங்கும் பிளாஸ்டிக் விழிப்புணர்வு, மரம் வளர்ப்பு, மழை நீர் சேகரிப்பு ஆகியவற்றை வலியுறுத்தி அரசு பிரச்சாரம் மேற்கொண்டாலும், அதனை நடைமுறையில் மக்கள் சரிவர பின்பற்றுவதில்லை.

இந்த நிலையில், பாளை என்ஜிஓ காலனி திருமண மண்டபத்தில் நேற்று நடந்த திருமண விழா அனைவரையும் ஆச்சரியப்பட வைத்ததுடன், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது.

மரக்கன்று மட்டுமின்றி திருமண மண்டபத்தில் திரும்பிய இடமெல்லாம் இயற்கை பாதுகாப்பை வலியுறுத்தியும், புவி வெப்பமடைவதை தடுக்க கோரியும் வண்ணப்படங்களுடன் போஸ்டர் ஓட்டப்பட்டிருந்தன.

மணமக்கள் சுப்பிரமணியனும், மணமகள் இசைகலாவும் திருமணத்துக்கு வந்தவர்களுக்கு மரக்கன்று வழங்கினர். உணவுக் கூடத்தில் தண்ணீர், தயிர், பாயாசம் ஆகியவை பிளாஸ்டிக் டம்பளர்களுக்கு பதிலாக சிறிய அளவிலான மண் குவளைகளில் வழங்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+