திசநாயகத்துக்கு சிறந்த வெளிநாட்டு செய்தியாளர் விருது - 'பிரிட்டிஷ் பிரஸ்' வழங்கியது
லண்டன்: இலங்கை அரசால் சிறை தண்டனை பெற்று ஜாமீனில் உள்ள தமிழ் பத்திரிகையாளர் ஜெ.எஸ்.திசநாயகத்துக்கு 'பிரிட்டிஷ் பிரஸ்' விருது வழங்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விருது, இந்தாண்டின் சிறந்த வெளிநாட்டு செய்தியாளர் என்ற முறையில் திசநாயகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இன ஆதிக்க வன்முறைகளுக்கு எதிராக தனது இணைய இதழில் பல்வேறு கட்டுரைகளை எழுதி வெளியிட்டு வந்த திசநாயகத்தை இலங்கை அரசு இனக்கலகத்தை தூண்டுவதாகக் கூறி கடந்த 2008ம் ஆண்டு கைது செய்தது.
தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டு இருபது ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற திசநாயகம், பல்வேறு முயற்சிகளுக்கு பின்னர் கடந்த ஜனவரி மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் பிரிட்டன் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் சிறந்த வெளிநாட்டு செய்தியாளருக்கான விருதுக்கு திசநாயகம் தேர்வு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.
லண்டனில் உள்ள கிராஸ்னோவர் ஹோட்டலில் கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்ற விழாவில் விருது வழங்கப்பட்டது.
திசநாயகம் குறித்து 'பிரிட்டிஷ் பிரஸ்' குறிப்பிடுகையில், 'செய்தி சேகரிப்பதில் மிகுந்த சிக்கல்களும், இன்னல்களும் கொண்ட இலங்கை சூழலில், ஒடுக்குமுறைகளுக்கும், இடர்பாடுகளுக்கும் இடையே துணிச்சலாக உண்மை செய்திகளை உலகுக்கு எடுத்து சொன்னவர் திசநாயகம்.
அவர் தந்த செய்திகள், பிரிட்டன் பத்திரிகையாளர்களுக்கு பல்வேறு வகையில் உதவிகரமாக இருந்தன' எனக் கூறியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications