மாற்றுத்திறனாளிகள் இந்தியாவில் அதிகம்: அமைச்சர் நெப்போலியன் தகவல்
நெல்லை: ஆஸ்திரேலிய நாட்டின் மக்கள் தொகையை விட இந்தியாவில் மாற்று திறனுடையோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக நெல்லையில் நடந்த விழாவில் மத்திய அமைச்சர் நெப்போலியன் தெரிவித்தார்.
நெல்லையில் மாற்று திறனாளிகள் பேரணி, மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலெக்டர் ஜெயராமன் தலைமையில் நடந்தது.
விழாவில் 204 பேருக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி மத்திய அமைச்சர் நெப்போலியன் பேசியதாவது:
2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 2.19 கோடி மாற்று திறனுடையோர் உள்ளனர். இதில் 1.06 கோடி பேர் கண் பார்வையற்றோர், 61 லட்சம் பேர் கை, கால் ஊனமுற்றோர், 30லட்சம் பேர் வாய் பேசமுடியாத, காது கேட்கும் திறனற்றோர், 22 லட்சம் பேர் மனவளர்ச்சி குன்றியோர் ஆவர்.
ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 2 கோடியோ 6 லட்சம் பேர். இதைவிட அதிகமாக இந்தியாவில் மாற்று திறனுடையோர் உள்ளனர். வருகின்ற 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் இது 2.50 கோடியை தாண்டிவிடும்.
தமிழகத்தில் 9.65 லட்சம் மாற்று திறனுடையோர் உள்ளனர். எனது துறையின் மூலம் என்னென்ன வசதிகள், உரிமைகள் உள்ளதோ, அத்தனையும் மாற்று திறனுடையோருக்கு பெற்று தரப்படும்.
மாற்று திறனுடையோருக்கு தனி அமைச்சகத்தை உருவாக்கி இந்தியாவுக்கே முன்னோடி என நிருபித்தவர் தமிழக முதல்வர் கருணாநிதி.
இந்தியாவில் ஒவ்வொரு திட்டத்தையும் நிறைவேற்றுவதில் தமிழ்நாடு தான் முதன்மை மாநிலமாக திகழ்கிறது' என்றார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications