மண்டல பூஜை : சபரிமலை பாதுகாப்பு பணியில் தமிழக போலீஸ்!
திருவனந்தபுரம்: சபரிமலைக்கு வரும் தமிழக பக்தர்களுக்கு உதவ இந்த ஆண்டு 90 தமிழக போலீசார் அடங்கிய குழு சபரி மலைக்குச் சென்றுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல கால பூஜையை முன்னிட்டு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்த ஆண்டு வரலாறு காணாத அளவு கூட்டம் அலைமோதுகிறது. இதனால் சபரி்மலையில் அதிரடிப் படை கமாண்டோ போலீசார் உள்பட 1500க்கும் மேற்பட்ட கேரள போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவதையடுத்து அவர்களுக்கு உதவி செய்வதற்காக தமிழக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட உள்ளனர். இதற்காக இன்ஸ்பெக்டர், 3 சப்-இன்ஸ்பெக்டர்கள், 90 போலீசார் அடங்கிய குழு நேற்று முன்தினம் சபரிமலைக்கு வந்தனர்.
இது குறித்து தென்மண்டல கூடுதல் டிஐஜி சந்திரசேகரன் கூறுகையில்,
"முதல் முறையாக இந்த அளவு சீருடை அணிந்த தமிழக போலீசார் சபரிமலைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தமிழக பக்தர்களுக்கு உதவுவார்கள். மேலும், தமிழக குற்றவாளிகள் யாரும் வருகிறார்களா என்றும் கண்காணி்ப்பர். தமிழக போலீசார் சன்னிதானம் முதல் மரக்கூட்டம் வரை பாதுகாப்பில் ஈடுபடுவார்கள்," என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications