ரியாத் சாலையில் ரூ.6.5 லட்சம்: உரியவரிடம் ஒப்படைத்த தமிழர்

Subscribe to Oneindia Tamil

Manikandan
ரியாத்: ரியாத் மாநகரில் தனியார் கார்கோ நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த மனிகண்டன்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் வேலை முடிந்து இரவு 11 மணிக்கு சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ரப்பர்பேண்டால் கட்டப்பட்ட நிலையில் ஒரு பணக்கட்டு ஒன்று தரையில் கிடப்பதை கண்டார்.

அதை எடுத்து பார்த்த அவர் ஒருகணம் திகைத்து போனார். அத்தனையும் 500 ரியால் நோட்டுகளால் ஆன 50,000 ரியால் அதில் இருந்தது. (இந்திய மதிப்பில் சுமார் ஆறரை லட்சம் ரூபாய்).

உடனே, அருகிலிருந்த ஃபாஸ்ட்புட் கடையை அனுகி அக்கடை முதலாளியான கேரளாவைச் சேர்ந்த ஹம்ஜா என்பவரிடம் சென்றார்.

'கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் யாராவது தவற விட்டிருக்க வாய்ப்புண்டு. எனவே, வந்து கேட்டால் கொடுத்துவிடுங்கள்' எனக் கூறி பணத்தை பத்திரமாக கொடுத்துவிட்டுச் சென்றார்.

அடுத்த 15 நிமிடம் கழித்து சவூதி நாட்டைச் சேர்ந்த ஒருவர் பதைபதைப்புடன் வந்து, அந்த பகுதியில் தரையெல்லாம் தேடிக் கொண்டிருந்தார்.

விவரம் கேட்டபோது பணம் காணாமல் போனதை கூறினார். பணம் அவருடையது தான் ன் அடிப்படையில் பணம் அவருடையது தான் என்பதை உறுதி செய்தபின் ஃபாஸ்ட்புட் கடைக்காரர் அந்த பணத்தை அவரிடம் ஒப்படைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+