இன்று உலகெங்கும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

Father's Day
வழக்கம் போல இதுவும் மேற்கிலிருந்து இந்தியாவுக்கு வந்த ஒரு நிகழ்ச்சிதான். அன்னையர் தினத்தைப் போலவே தந்தையர்களுக்காவும் ஒரு தினம் கொண்டாடப்பட வேண்டும் என்பதற்காக தந்தையர் தினம் கொண்டாடப்படத் தொடங்கியது.

தந்தையர்களுக்குப் பரிசளிப்பது, சிறப்பு விருந்தளிப்பது, குடும்பத்தினருடன் வெளியில் சென்று கொண்டாடுவது என இது கொண்டாடப்படுகிறது.

உலகிலேயே முதல் முறையாக 1910ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி வாஷிங்டனில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. இதற்கான முயற்சிகளை எடுத்தவர் சோனாரா டாட் ஆவார் என்ற பெண்மணி ஆவார்.

1909ம் ஆண்டு ஸ்போகேனில் உள்ள சர்ச்சில் அன்னையர் தினம் பற்றிக் குறிப்பிட்டதைக் கேட்ட அவர் தந்தையர் தினமும் கொண்டாடப்பட வேண்டும் என கருதினார். அடுத்த ஆண்டே அதை அவர் நிறைவேற்றினார். அன்று முதல் அது உலகெங்கும் பிரபலமாகி தற்போது உலக அளவில் கொண்டாடப்படும் தினமாகியுள்ளது.

1910ம் ஆண்டு கொண்டாடப்பட்ட தந்தையர் தினத்தின்போது உயிருடன் இருக்கும் தந்தையருக்கு சிவப்பு ரோஜா கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இறந்த தந்தையரின் சமாதிகள், படங்களுக்கு வெள்ளை ரோஜா கொடுத்து அவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

பின்னர் 1966ம் ஆண்டு அமெரிக்க அதிபர் லிண்டன் ஜான்சன், தந்தையர் தினத்தை அங்கீகரித்து உத்தரவிட்டார். அதன்படி ஆண்டுதோறும் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக கொண்டாடப்படும் என அவர் உத்தரவிட்டார். அதன் பின்னர் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 1972ம் ஆண்டு, ஒரு சட்டத்தின் மூலம் தந்தையர் தினத்தை தேசிய விடுமுறை தினமாக அதிபர் நிக்சன் அறிவித்தார்.

தந்தையர் தினம் தவிர ஆடவர் தினம் என்ற ஒன்று ஆண்டுதோறும் நவம்பர் 19ம் தேதி கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது, தந்தையர் ஆகாத ஆண்கள், இளைஞர்களுக்கானதாகும்.

அன்னையர் தினம் இந்தியாவில் பிரபலமாகியுள்ளதைப் போல தற்போது தந்தையர் தினமும் இங்கும் கொண்டாடப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+