தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு கூடுதலாக 55 கேரள பஸ்கள்

Subscribe to Oneindia Tamil

Sabarimala
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல கால பூஜைக்காக வரும் 16ம் தேதி நடை திறக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இவர்கள் வந்து செல்ல கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

இது குறித்து கேரள போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோஸ் பெற்றயியல் கூறியதாவது,

சபரி்மலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தினமும் 350 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகிறது. தமிழகத்தில் தென்காசி, சென்னை, கோவை உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து 55 பேருந்துகள் இயக்கப்படும்.

இதே போல் கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படும். புனலூர்-செங்கோட்டை ரயில் போக்குவரத்து துவக்கம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், இப்பகுதியில் இருந்தும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். கொட்டாரக்கரை, எர்ணாகுளம், கோழிக்கோடு, கோட்டயம், பாலக்காடு, கண்ணூர், பெங்களூர், கோவை ஆகிய இடங்களில் ஆன்லைன் முன்பதிவு மையம் திறக்கப்படும்.

லாரிகள் மற்றும் ரிக்ஷாக்களில் பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சரக்கு வாகனங்களில் வரும் பக்தர்கள் மாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் தடுத்து நிறுத்தப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+