துபாய் கட்டுமான நிறுவனத்திற்கு கொத்தனார்கள் தேவை-தஞ்சை, காரைக்குடியில் ஆள்தேர்வு

தமிழக அரசு நிறுவனமான ஓவர்சீஸ் மேன்பவர் கார்பரேஷன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
துபாய் நாட்டிலுள்ள ஒரு முன்னணி தனியார் நிறுவனத்திற்கு கொத்தனார், இரும்பு கம்பியில் சாரம் கட்டுபவர்கள், சட்டரிங் கார்பெண்டர்கள், மற்றும் ஸ்டீல் பிக்சர்கள் பெருமளவில் தேவைப்படுகின்றனர். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு அனுபவம் மற்றும் திறமையின் அடிப்படையில் பணி மற்றும் ஊதியம் வழங்கப்படும்.
சாப்பாடு மற்றும் தங்கும் இடம் முற்றிலும் இலவசம். இது தவிர கூடுதல் நேர சம்பளமும் வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு சேவை கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது.
தகுதி உடையவர்கள் வரும் 23-ம் தேதி தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே உள்ள வாண்டையர் ஐ.டி.ஐ.யிலும், 24-ம் தேதி காரைக்குடியில் உள்ள கோவிலூர் பாரத் ஐ.டி.ஐ.யிலும் நடக்கும் நேர்முக தேர்வில் கலந்து கொள்ளலாம்.நேர்முக தேர்வுக்கு வருபவர்கள் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் சான்றிதழ்களின் நகல்களை கொண்டு வரவேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications