துபாயில் நகைச்சுவையாளர் மன்றத்தின் சேட்டை அரங்கம்

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாயில் நகைச்சுவையாளர் மன்றத்தின் சார்பில் சேட்டை அரங்கம் நிகழ்ச்சி 01.10.2010 வெள்ளிக்கிழமை மாலை அல் கிஸஸ் ஆப்பிள் சர்வதேசப் பள்ளியில் நடைபெற்றது.

சேட்டை அரங்கம் நிகழ்ச்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக குணா செயல்பட்டார். அவர் தனது உரையில் உலகிலேயே முதன் முறையாக சேட்டை அரங்கம் என்ற தலைப்பிலான நிகழ்வு அமீரகத்தில் தான் நடக்கிறது என பெருமிதம் கொண்டார். துவக்கமாக இறைவணக்கம் பாடப்பட்டது.

"கலகலப்பான குடும்ப வாழ்க்கைக்கு நகைச்சுவையே பிரதானம்" என்ற அணியில் பிரியா, பாலாஜி, ரமணி, நியாஸ், செந்தில் வேலன் ஆகியோரும், அமர்க்களமான அலுவலக வாழ்க்கைக்கு நகைச்சுவையே அச்சாணி எனும் அணியில் சுரேஷ், சுப்பிரமணி, நெல்லையப்பன், சுஜாதா, கார்த்திக் ஆகியோரும், நகைச்சுவை என்பது கலக்கலான பொழுது போக்கு அம்சம் மட்டுமே எனும் அணியில் லக்‌ஷ்மி, காமேஸ்வரன், மொய்தீன் பிச்சை, வெங்கட்ராமன், ரகுராஜ் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.

நடுவர்களாக சிவக்குமார் மற்றும் ரேவதி ஆகியோர் செயல்பட்டனர். பேச்சாளர்கள் பலர் முதல் முறையாக மேடை ஏறினாலும் சிறப்பாக பேசினர்.

நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதுபோன்ற நிகழ்வுகள் அமீரகமெங்கும் நடத்தப்பட வேண்டும் என்ற தங்களது வேண்டுகோளினைத் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+